முகப்பு
இந்தியா

ஒடிசா: சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

மாதந்தோறும் ஊதியத்துடன் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஒடிசா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Updated On : 29 ஏப்ரல், 2021 at 3:04 PM
பகிர்:

ஒடிசாவில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு ஊதியத்துடன் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் கரோனாவிற்கு எதிரான போரில் சுகாதாரத் துறையுடன் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

Advertisement

கரோனா தொற்றுக்கு எதிராக பணியாற்றி வரும் சுகாதாரத் துறை ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து கடந்த 16-ம் தேதி தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒப்பந்த ஊழியர்கள் உள்பட அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.