இந்தியா

ராஜஸ்தான் முதல்வர் குணமடைய பிரதமர் வாழ்த்து

DIN

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமது மனைவிக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கரோனா தொடர்பான பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, நன்றாக இருக்கிறேன். கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி என்னை தனிமைப்படுத்திக்கொண்டு பணியில் ஈடுபடுவேன்' என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அவரது மனைவி விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

SCROLL FOR NEXT