தெலங்கானாவில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 7,646 பேருக்குத் தொற்று
தெலங்கானாவில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் ஒரேநாளில் 7,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெலங்கானாவில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் ஒரேநாளில் 7,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53 பேர் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 2,261 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும், ஒரேநாளில் 7,646 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 4,35,606-ஐ எட்டியுள்ளது.
நேற்று ஒரேநாளில் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் மொத்தம் 77,091 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.
தற்போது மருத்துவமனை சிகிச்சையில் 77,727 பேர் உள்ளனர். 5,9263 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில் மொத்தம் இதுவரை 3,55,618 பேர் குணமடைந்துள்ளனர்.
மாநிலத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.