முகப்பு
இந்தியா

கரோனாவிலிருந்து மீண்டார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு கரோனா தொற்றிலிருந்து மீண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)
பகிர்:

உத்தரப்பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு கரோனா தொற்றிலிருந்து மீண்டார்.

நாட்டில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

அந்த வகையில், உத்தரப்பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இணையவழியில் அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வந்தார். 

இந்நிலையில், அவர் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார். இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. 

யோகி ஆதித்யநாத் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி கரோனா தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.