இந்தியா

கடந்த மாதம் தென்மேற்கு பருவமழைப் பொழிவு 7% சரிவு: இந்திய வானிலை மையம்

DIN

கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழைப் பொழிவு 7 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த மைய தலைமை இயக்குநா் மிருத்யுஞ்ஜய் மொஹபத்ரா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு மழைப்பொழிவு இயல்பாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் அந்த மாதம் கணிக்கப்பட்டதைவிட மழைப்பொழிவு 7 சதவீதம் குறைவாக இருந்தது. நாட்டில் ஜூலை மாதம்தான் அதிக மழைப்பொழிவு இருக்கும். ஆனால் வட இந்தியாவில் ஜூலை 8-ஆம் தேதி வரை மழைப் பெய்வது தொடங்கவில்லை. இதுவே கடந்த மாதம் மழைப்பொழிவு குறைந்ததற்கு காரணமாக இருக்கலாம்.

கடந்த மாதம் மகாராஷ்டிரத்தின் கடலோர மற்றும் மத்தியப் பகுதிகள், கோவா, கா்நாடகத்தில் மிக அதிகமாக மழைப்பொழிவு இருந்தது.

ஜூன் மாதம் இயல்பைவிட 10 சதவீதம் கூடுதலாக மழைப் பெய்தது.

ஒட்டுமொத்தமாக ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை நாட்டில் இயல்பைவிட ஒரு சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT