முகப்பு
ஆறாவது முறையாக திருமணம் - முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு 
இந்தியா

ஆறாவது முறையாக திருமணம் - முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு 

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் சௌதரி பஷீர் ஆறாவது முறையாக திருமணத்திற்கு தயாரானபோது அவரது தற்போதைய மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:49 AM
ஆறாவது முறையாக திருமணம் - முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு 
பகிர்:

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் சௌதரி பஷீர் ஆறாவது முறையாக திருமணத்திற்கு தயாரானபோது அவரது தற்போதைய மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் சௌதரி பஷீர் அவருடைய மனைவியான நக்மா பஷீரை  மூன்று முறை தலாக் கூறி வீட்டைவிட்டு துரத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மூன்றாவது மனைவியான  நக்மா பஷீர்  , தன்னுடைய கணவர் ஆறாவது முறையாக திருமணம் செய்யவிருக்கும் தகவலை அறிந்துகொண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரை விசாரித்த காவல்துறை சௌதரி பஷீரை  இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமைச் சட்டம் 2019 - ன்  கீழும் , சட்டப்பிரிவு ஐபிசி 504  கீழும்  வழக்கு பதிவு செய்தனர்.

நக்மாவிற்கு இரு ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் ,தனக்கு அளிக்கப்பட்ட அநீதிக்காக யாராவது உதுவுங்கள் என சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட காணொலி வைரலாகி வருகிறது.

சௌதரி பஷீர் சமாஜ்வாதி காட்சியில்  மாயாவதியின் அரசிற்கு கீழ் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →