10வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம் 
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: 10வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து நாடாளுமன்றம் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

ANI

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து நாடாளுமன்றம் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 10 நாளாக அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அவையின் மாண்பை குலைக்கும் விதமாக உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டாம் என்று இரு அவைத் தலைவர்களும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று காலை கூடிய மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தொடங்கிய அவையில் எதிர்க்கட்சிகள் அமளிக்கு மத்தியில் பொது காப்பீட்டு (திருத்த) மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட பின், நாளை காலை 11 மணிவரை அவையை ஒத்திவைத்தனர்

அதேபோல, மாநிலங்களவையிலும் உள்நாட்டு கப்பல் மசோதா 2021 நிறைவேற்றப்பட்டு நாளை காலை வரை அவையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுண்ணறிவுக்குப் புலப்படாது!

காரையாறு காணிக்குடியிருப்பில் சிறுத்தை தாக்கி இளைஞா் காயம்

கும்ப ராசிக்குப் பணவரவு: தினப்பலன்கள்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் 250 போ் கைது

SCROLL FOR NEXT