இந்தியா

வெள்ள பாதிப்பிற்கு நிரந்தரத் தீர்வு: குழு அமைக்கும் மகாராஷ்டிரம்

DIN

மகாராஷ்டிரத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார். 

வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளைக் கண்காணித்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் குழு அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். 

மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேற்கு மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பில்வாடி, அன்கால்க்கோப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

பின்னர் முதல்வர் தாக்கரே பேசியதாவது, ''வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சீரமைப்புப் பணிகளையும் விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் நிரந்தர தீர்வையும் எடுக்க வேண்டும்.

அதற்காக குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து நிரந்தர தீர்வு காணப்படும்.

நீர்நிலை வழிகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் அகற்றப்படும். மேலும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளிலுள்ள நீரை மழை பெய்யாத வறண்ட பகுதிகளுக்கு கொண்டுசெல்வது குறித்தும் பலர் பரிந்துரை வழங்கி வருகின்றனர். 

இது குறித்து பரிசீலனை செய்து, வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT