முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 50 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 50 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:49 AM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் புதிதாக 50 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தில்லியில் 64,276 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 50 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.08 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 65 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,36,451 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,10,874 பேர் குணமடைந்துள்ளனர். 25,058 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 519 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 91,100 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் 1,01,34,821 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக்கொண்டவர்கள் 74,20,159 பேர். 27,14,662 பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.