இந்தியா

பெட்ரோல் உயர்வு: நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்ற ராகுல்

ANI

நாடாளுமன்ற கூட்டத்திற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி இன்று சைக்கிளில் சென்றதால் பரபரப்பு நிலவியது.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுடன் இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு சைக்கிளில் சென்றார். அவருடன் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் சைக்கிளில் சென்றனர்.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 10வது நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்ய காலை உணவுக்கு காங்கிரஸின் ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். இதில், பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT