உத்தரப் பிரதேசம் : கடந்த 24 மணி நேரத்தில் குறைந்த கரோனா தொற்று
இரண்டாம் அலையின் தாக்கம் உச்சம் அடைந்து கொண்டிருக்கிற நேரத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் படிப்படியாக கரோனா தொற்று குறைந்து வருகிறது.
இந்தியாஉத்தரப் பிரதேசம் : கடந்த 24 மணி நேரத்தில் குறைந்த கரோனா தொற்று
இரண்டாம் அலையின் தாக்கம் உச்சம் அடைந்து கொண்டிருக்கிற நேரத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் படிப்படியாக கரோனா தொற்று குறைந்து வருகிறது.
இரண்டாம் அலையின் தாக்கம் உச்சம் அடைந்து கொண்டிருக்கிற நேரத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் படிப்படியாக கரோனா தொற்று குறைந்து வருகிறது. புதிதாக தொற்றில் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தாண்டாத நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுக்க புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக குறைந்திருக்கிறது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது .
தற்போது அம்மாநிலத்தில் 646 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகபட்சமாக மணிப்புரி மாவட்டத்தில் 52 பேரும் , குஷிநகரில் 50 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 56 மாவட்டங்களில் பாதிப்படைந்தவர்கள் 20 மாவட்டங்களில் தான் இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .
இதையும் படிக்க | 'நான் வாழ விரும்பவில்லை' - விபத்து குறித்து நடிகை யாஷிகா உருக்கம்
48 மாவட்டங்கள் கரோனா அல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டதோடு அதில் 10 மாவட்டங்கள் கரோனா வராத இடங்களாகவே நீடிக்கிறது.
அரசு சார்பில் " கரோனா தாக்கத்தால் உத்தரப் பிரதேசத்திற்கு வெளியே இருந்து வருபவர்களுக்குத் தீவிர கண்காணிப்புடன் கூடிய சிகிச்சை வழங்கப்படுகிறது . மூன்றாவது அலையின் தாக்கத்தைக் குறைக்கும் பொருட்டு அதிகப்படியான கரோனா மாதிரி பரிசோதனைகள் நடத்தப்பட்டு தொற்று உடனே கண்டறியப்படும் " என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.