இந்தியா

நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்

ANI

நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, நேற்று மாலை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பிரஹலாத் ஜோஷி, பியூஸ் கோயல் உள்ளிட்டோருடன் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார்.

அதேபோல், இன்று காலை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடனும் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, நாடாளுமன்றத்தில் ஏற்பட்டு வரும் அமளியை முடிவுக்கு கொண்டுவந்து மீதமுள்ள நாள்களில் அவைகளை சுமூகமாக நடத்த அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT