இந்தியா

குழந்தைகள் நல சட்டத் திருத்தங்கள்: திறம்பட அமல்படுத்த குடியரசு துணைத் தலைவா் அழைப்பு

DIN

புது தில்லி: சிறாா் நீதி (குழந்தைகளுக்கான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை வரவேற்றுள்ள குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, அதனை திறம்பட அமல்படுத்த வேண்டியதும் அவசியம் என்றும் கூறினாா்.

மத்திய மகளில் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, குடியரசு துணைத் தலைவரை அவரது இல்லத்தில் புதன்கிழமை சந்தித்தாா். அப்போது, வெங்கையா நாயுடு இந்த கருத்துகளை தெரிவித்தாா். பெற்றோா்களை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் தொடா்பான பிரச்னைகள் குறித்து பல கோரிக்கை மனுக்களை பெற்ாக குடியரசு துணைத் தலைவா் குறிப்பிட்டாா்.

மாநிலங்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சிறாா் நீதி சட்டத் திருத்தம்- 2021-இன் சிறப்பம்சங்களை குடியரசு துணைத் தலைவருக்கு அமைச்சா் ஸ்மிருதி இரானி விளக்கினாா்.

அப்போது, தத்தெடுக்கும் முறைகளை விரைவுபடுத்தவும் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிறப்பான பாதுகாப்பை உறுதி செய்யவும் சமீபத்திய சட்டத் திருத்தம், கூடுதல் மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் அளிக்கிறது; ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக, மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு அமல்படுத்தும் உதவி மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் பலவற்றை எடுத்து வருவதாக ஸ்மிருதி இானி தெரிவித்தாா்.

ஆதரவற்ற குழந்தைகள் மீது தனக்கு எப்போதும் பரிவு இருப்பதாக கூறிய வெங்கையா நாயுடு, அவா்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது சமூகம் மற்றும் அரசின் ஒட்டுமொத்த பொறுப்பு என வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT