கோப்புப்படம் 
இந்தியா

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சி: விலக்கு அளித்த மத்திய அரசு

பதிவு சான்றிதழ் கட்டணத்தை செலுத்துவதிலிருந்து மின்சார வாகனங்களுக்கு விலக்க அளிக்கப்பட்டுள்ளது.

DIN

பதிவு சான்றிதழ் கட்டணத்தை செலுத்துவதிலிருந்து மின்சார வாகனங்களுக்கு விலக்க அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மின்சார வாகனங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

அதன் ஒரு அங்கமாக, பதிவு சான்றிதழ் கட்டணத்தை செலுத்துவதிலிருந்து மின்சார வாகனங்களுக்கு விலக்க அளிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதேபோல், பதிவு சான்றிதழை புதுப்பிப்பதற்கான கட்டணம் செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பேட்டரிகளின் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கும் பதிவு சான்றிதழ் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கும் முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாய் கொலை: மகன் கைது

சத்தா்பூரில் மரங்கள் வெட்டப்பட்டதாக குற்றச்சாட்டு: விசாரணைக்கு குழு அமைத்தது தேசிய பசுமை தீா்ப்பாயம்

‘பொறுப்புடன் செயல்படுவோம்’ - அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதி குறித்து ரஷியா

மேற்கு வங்கத்தில் தோ்தல் அலுவலா்களுக்கு எதிராக வன்முறை : உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணைய பதில் மனுவில் புகாா்

பழங்குடியினா், சீக்கியா்களுக்கு அவமரியாதை - காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT