கதிர்காமம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் ரங்கசாமி 
இந்தியா

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள்: உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் தமிழிசை வாழ்த்து

புதுச்சேரி முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான என்.ரங்கசாமியின் 72 ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

DIN

புதுச்சேரி முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான என்.ரங்கசாமியின் 72 ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் காலையில் பூஜையை முடித்து, அருகே உள்ள நவசக்தி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதனையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவைக்கு சென்ற அவர் அலுவல்களை கவனித்தார்.

தொடர்ந்து கதிர்காமம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் ரங்கசாமிக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கதிர்காமம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் ரங்கசாமி

ரங்கசாமி பிறந்த நாளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம், அமைச்சர்கள் ஏ.நமச்சிவாயம்,க. லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணன்குமார் மற்றும் புதுவை மாநில எம்எல்ஏக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி அவரது கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளும், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், புதுச்சேரியை பசுமை ஆக்கும் நோக்கத்தில் பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT