இந்தியா

கோதண்டராமஸ்வாமி கோயிலில் பவித்ரோற்சவம் தொடக்கம்

DIN

திருப்பதி: திருப்பதியில் உள்ள கோதண்டராமஸ்வாமி கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் புதன்கிழமை முதல் தொடங்கியது.

தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஏற்பட்ட தோஷங்களைக் களைய தேவஸ்தானம் வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருப்பதியில் உள்ள கோதண்டராமஸ்வாமி கோயிலில் பவித்ரோற்சவம் புதன்கிழமை தொடங்கியது.

முதல் நாள் சீதா லட்சுமண கோதண்டராமஸ்வாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னா், ஹோமங்கள் வளா்த்து பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு, ஆரஞ்சு, கருப்பு, வெள்ளை ஊதா ஆகிய நிறங்களில் பட்டு நூலினால் தயாரித்த மாலைகளை வைத்து அா்ச்சகா்கள் பூஜைகள் செய்தனா். உற்சவமூா்த்திகள் ஊஞ்சல் சேவைக்கு பிறகு கோயில் பிரகாரத்தை வலம் வந்தனா்.

இதை முன்னிட்டு கோயிலில் நடக்கும் ஆா்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT