இந்தியா

நிலநடுக்க எச்சரிக்கை செயலி: நாட்டில் முதல்முறையாக அறிமுகப்படுத்திய உத்தரகண்ட் அரசு!

DIN

நாட்டில் முதல்முறையாக நிலநடுக்கம் எச்சரிக்கை குறித்த செயலியினை உத்தரகண்ட் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 

'உத்தரகண்ட் பூகம்ப எச்சரிக்கை' என்ற பெயரில் நிலநடுக்க எச்சரிக்கை செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் உத்தரகண்ட் ஆகும்.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி புதன்கிழமை இந்த செயலியை அறிமுகப்படுத்தினார். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் செயல்படும். 

உத்தரகண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் ரூர்கியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது. 

நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திகளை அனுப்பும். நிலநடுக்கத்தின்போது சிக்கியவர்களின் இருப்பிடத்தை கண்டறியவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கையை அனுப்பவும் இந்த செயலி உதவும்.

'உத்தரகாண்ட் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாகும், எனவே நிலநடுக்கத்தின்போது மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உதவும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது' என முதல்வர் தெரிவித்தார். 

இந்த செயலியின் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் செயலி குறித்துப் பகிரவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.  

இந்த நிகழ்வின்போதுபோது பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தன்சிங் ராவத், தலைமைச் செயலாளர் டாக்டர் எஸ்.எஸ்.சந்து மற்றும் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT