பெங்களூரு மருத்துவமனைக் கட்டடத்திலிருந்து குதித்து மருத்துவர் தற்கொலை
எம்எஸ் ராமையா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர் ஒருவர், மருத்துவமனைக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெங்களூரு: எம்எஸ் ராமையா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர் ஒருவர், மருத்துவமனைக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
45 வயதாகும் பேராசிரியர், புதன்கிழமை காலை, மருத்துவமனை கட்டடத்தின் 8வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பணிச்சுமையே தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
தற்கொலை செய்து கொண்டு பலியான டாக்டர் அம்பரீஷ் விஜய் ராகவ், சைக்காலஜித் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றினார். புதன்கிழமை காலை வழக்கம் போல பணிக்கு வந்தவர், உடன் பணியாற்றுபவர்களிடமும் சாதாரணமாகவே இருந்துள்ளார்.
Advertisement
இரவு 11.45 மணியளவில், அவர் மருத்துவமனைக் கட்டடத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது கார் பழுதுபார்க்கச் சென்றிருந்தது குறித்து அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததை சிலர் பார்த்துள்ளனர். அதுவே அவரை கடைசியாகப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
அவரது மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் எந்த பிரச்னை குறித்தும் தன்னிடம் ஆலோசிக்க மாட்டார் என்றும், சில மாதங்களாக பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.