ராகுல் காந்தி 
இந்தியா

‘ஒவ்வொரு இந்தியரின் போனையும் மோடி ஒட்டுக்கேட்டுள்ளார்’: ராகுல் காந்தி

ஒவ்வொரு இந்தியரின் தொலைபேசிகளையும் நரேந்திர மோடி ஒட்டுக்கேட்டுள்ளார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

ANI

ஒவ்வொரு இந்தியரின் தொலைபேசிகளையும் நரேந்திர மோடி ஒட்டுக்கேட்டுள்ளார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று ஜந்தர் மந்தருக்கு சென்றுள்ளனர்.

அப்போது ராகுல் காந்தி பேசுகையில், “ஜந்தர் மந்தரில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து வந்துள்ளோம்.

மேலும், பெகாஸஸ் குறித்து விவாதிக்க கோரினோம், ஆனால் மத்திய அரசு அதை நடத்தவில்லை. நரேந்திர மோடியால் ஒவ்வொரு இந்தியரின் தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT