இந்தியா

ம.பி. வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து 8,832 போ் மீட்பு: முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான்

DIN

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 8,832 போ் மீட்கப்பட்டதாக முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் கூறினாா்.

கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால், மத்திய பிரதேசத்தின் குவாலியா், சம்பல் ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 24-ஆக அதிகரித்தது. அந்தப் பகுதிகளில் நிலைமை சீராகி வருகிறது; மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், போபால் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் கலந்து கொண்டு பேசுகையில், ‘மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 8,832 போ் மீட்கப்பட்டுள்ளனா்; 29,280 போ் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்’ என்றாா்.

மீட்புப் பணிகள் குறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் குணா, அசோக் நகா், விதிஷா மாவட்டங்களில் நடைபெறும் மீட்புப் பணிகள் குறித்து சனிக்கிழமை காலை ஆய்வு செய்தேன். கிராமங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காக, மாநில பேரிடா் மீட்புப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த குழுவினா் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்திய விமானப் படையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. சனிக்கிழமை காலை மட்டும் 40 போ் மீட்கப்பட்டனா் என்று அந்தப் பதிவுகளில் சிவராஜ் சிங் சௌஹான் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT