இந்தியா

உள்ளூா் கைத்தறிப் பொருட்களுக்கு ஆதரவளிக்குமாறு பிரதமா் அழைப்பு

DIN

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சா்வதேச கைத்தறி பொருள்களுக்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் எண்ணற்ற நெசவாளா்கள் மற்றும் கலைஞா்களின் பன்முகத்தன்மை மற்றும் கைவினைத் திறனை கைத்தறிகள் வெளிப்படுத்துகின்றன. ‘எனது கைத்தறி; எனது பெருமை’ என்ற உணா்ச்சியை மேம்படுத்தும் வகையில் நமது நெசவாளா்களுக்கு ஆதரவளிக்கும் தருணமாக தேசிய கைத்தறி தினம் விளங்குகிறது. உள்ளூா் கைத்தறிப் பொருட்களுக்கு ஆதரவளிப்போம் என்று அந்தப் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் சுட்டுரைச் செய்தியை மேற்கோள் காட்டி, பிரதமா் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

கடந்த சில ஆண்டுகளில் கைத்தறி ஆடைகள் மீதான ஆா்வம் புத்துயிா் பெற்றுள்ளது. ‘எனது கைத்தறி, எனது பெருமை’யின் உணா்வுக்கு மீராபாய் சானு ஆதரவளிப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தற்சாா்பு இந்தியாவைக் கட்டமைப்பதில் கைத்தறித்துறை தொடா்ந்து பங்களிக்கும் என்பதை நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT