கோப்புப்படம் 
இந்தியா

இந்த மாவட்டத்தில் கரோனா பாதிப்பே இல்லையாம்

கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மகாராஷ்டிராவின் பண்டாரா உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

DIN

கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மகாராஷ்டிராவின் பண்டாரா உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மகாராஷ்டிராவின் பண்டாரா நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தகவல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், "முறைான திட்டமிடுதலுடன் கண்காணிப்பு, பரிசோதனை, சிகிச்சை உள்ளிட்ட நடவடிக்கைகளின் விளைவாக 15 மாதங்களுக்கு பிறகு கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக பண்டாரா அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 578 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் கடம் கூறுகையில், "அரசு மற்றும் மக்கள் மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சிகளால் கிழக்கு மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பண்டாரா கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாகியுள்ளது.

தற்போது, மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லையெனிலும், வரும் நாள்களில் மக்கள் கவனமாக இருந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

பொங்கல் திருநாள்: சிறப்புப் பேருந்துகளில் 3.58 லட்சம் பேர் பயணம்!

தொடர் மழை, வெள்ளம்! தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட சாலைகள் மற்றும் வீடுகள்!

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டபுள் டெக்கா் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் முதல்வா் ஸ்டாலின்

SCROLL FOR NEXT