அகில் கோகோய் 
இந்தியா

மம்தாவுக்கு ஆதரவாக களமிறங்கும் அகில் கோகோய்..பாஜகவை வீழ்த்த புது வியூகம்

மத்திய பாஜக அரசை வீழ்த்த மம்தா பானர்ஜி தலைமையில் ஒர் அணி உருவாகிவருவதாக அசாம் எம்எல்ஏ அகில் கோகோய் தெரிவித்துள்ளார்.

DIN

மத்திய பாஜக அரசை வீழ்த்த மம்தா பானர்ஜி தலைமையில் ஒர் அணி உருவாகிவருவதாக அசாம் எம்எல்ஏ அகில் கோகோய் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆட்சி நடத்திவரும் பாஜகவை வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் வீழ்த்த மம்தா பானர்ஜி தலைமையிலான பிராந்திய கட்சிகளின் கூட்டணி உருவாகிவருவதாக அசாம் எம்எல்ஏ அகில் கோகோய் தெரிவித்துள்ளார்.

சுயேட்சை எம்எல்ஏவாக உள்ள தன்னை மம்தா பானர்ஜி அவரது கட்சியில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாகவும் அகில் கோகோய் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிராந்திய கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம். 2024ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடியை ஆட்சியிலிருந்து அகற்ற மம்தா பானர்ஜியை தலைவராக முன்னிருத்துகிறோம்.

அவருடைய கட்சியுடன் என்னுடைய ராய்ஜோர் தள கட்சியை இணைத்தால் திரிணமுல் காங்கிரஸ் அசாம் மாநில தலைவர் பதவியை அளிப்பதாக மம்தா உறுதி அளித்துள்ளார். இதுகுறித்த முடிவு கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்படும். திரிணாமுல் காங்கிரஸ், ராய்ஜோர் தள கட்சிகளுக்கிடையே மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது" என்றார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

1068 எபிசோடுகளுடன் முடிவடைந்த மாரி தொடர்!

தஞ்சை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT