முகப்பு
பிரதமா் நரேந்திர மோடி
இந்தியா

உஜ்வாலா 2.0 திட்டத்தை ஆகஸ்ட் 10-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் 

உஜ்வாலா 2.0 (பிரதமரின் உஜ்வாலா திட்டம்) திட்டத்தை பிரதமர் மோடி ஆகஸ்ட் 10ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

இந்தியா

உஜ்வாலா 2.0 திட்டத்தை ஆகஸ்ட் 10-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் 

உஜ்வாலா 2.0 (பிரதமரின் உஜ்வாலா திட்டம்) திட்டத்தை பிரதமர் மோடி ஆகஸ்ட் 10ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பிரதமா் நரேந்திர மோடி
பகிர்:

உஜ்வாலா 2.0 (பிரதமரின் உஜ்வாலா திட்டம்) திட்டத்தை பிரதமர் மோடி ஆகஸ்ட் 10ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடுவதோடு, நாட்டு மக்களுக்கும் அவர் உரையாற்ற உள்ளார். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர், உத்தரப் பிரதேச முதல்வர் ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் முதற்கட்டத்தில் கொண்டுவரப்படாத குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வைப்புத்தொகை இல்லாமல் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க (உஜ்வாலா 2.0 கீழ்) திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உஜ்வாலா 1.0 திட்டம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்தது. 

பின்னர் இந்த திட்டத்தின் இலக்கு 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த இலக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு 7 மாதங்கள் முன்பே, ஆகஸ்ட் 2019-இல் எட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →