அரசியலமைப்பு(127வது) திருத்த மசோதாவுக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு: மாயாவதி
ஓபிசி பட்டியலை மாநில அரசுகளே தயாரிக்க அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவிக்கும் என மாயாவதி தெரிவித்தார்.
இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் பட்டியலை மாநில அரசுகளே தயாரிக்க அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு(127வது) திருத்த மசோதாவை நிறைவேற்ற பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவிக்கும் என கட்சித் தலைவர் மாயாவதி திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:
"இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மாநில அரசுகளே அடையாளம் கண்டு பட்டியலில் இணைத்துக்கொள்ள வழிவகுக்கும் அரசியலமைப்பு(127வது) திருத்த மசோதாவை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கிறது. ஆனால், அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை மத்திய அரசு செய்ய வேண்டும்."
Advertisement
முன்னதாக, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் அரசியலமைப்பு(127வது) திருத்த மசோதாவை மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.