முகப்பு
இந்தியா

அசாமில் அதிகரிக்கும் கரோனா: மீண்டும் இரவு நேர ஊரடங்கு

அசாமில் கரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஆகஸ்ட், 2021 at 6:42 PM
அசாமில் அதிகரிக்கும் கரோனா: மாலை 6 முதல் காலை 5 வரை ஊரடங்கு
பகிர்:

அசாமில் கரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரு நாள்களுக்கு இந்த பகுதி நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement

அதில், சந்தைகள், கடைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் மாலையில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்படும். ஆனால் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

பொது இடங்களில் 10 பேருக்கு மேல் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். 

சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

கரோனா பரவல் குறைவதற்கு ஏற்ப மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.