பாஜக உள்பட 8 கட்சிகளுக்கு அபராதம் விதிப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை பொதுவெளியில் வெளியிடாததற்கு பாஜக உள்பட 8 கட்சிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாபாஜக உள்பட 8 கட்சிகளுக்கு அபராதம் விதிப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை பொதுவெளியில் வெளியிடாததற்கு பாஜக உள்பட 8 கட்சிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை பொதுவெளியில் வெளியிடாததற்கு பாஜக உள்பட 8 கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
கடந்த பிகார் தேர்தலின்போது, விதிகளை மீறிதயாகக் கூறி, காங்கிரஸ், பாஜக உள்பட ஏழு கட்சிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிபிஎம், தேசியவாக காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வரும் காலங்களில், வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை தங்கள் கட்சியின் இணையதங்களில் வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வாக்காளர்கள் இதுகுறித்த தகவல்களை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் செயலியை உருவாக்கி, குற்ற வழக்குகளின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கேட்டு கொண்டுள்ளது.
இதையும் படிக்க | ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற இந்தியர்களுக்கு வேண்டுகோள்
இதுகுறித்து உச்ச நீதிமன்றம், "வேட்பாளர் தேர்வுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக பொதுவெளியில் இதனை வெளியிட வேண்டும்" என தெரிவித்துள்ளது.
முன்னதாக, இதுகுறித்த வழக்கில், வேட்பாளர் தேர்வுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவோ வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. தற்போது, 48 மணி நேரத்திற்கு முன்பாக வேட்பாளர்களின் குற்ற பின்னணியை வெளியிட வேண்டும் என உத்தரவி்ட்டுள்ளது.
வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வெளியிடாத கட்சிகளின் சின்னத்தை முடக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தியதன் காரணத்தையும் சம்மந்தப்பட்ட கட்சிகள் தங்களின் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.