கோப்புப்படம் 
இந்தியா

2025க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க கூட்டு முயற்சி தேவை: வெங்கையா நாயுடு

2025க்குள் காசநோய் இல்லாத இந்தியா என்ற இலக்கை அடைய கூட்டு முயற்சி தேவை என துணைக் குடியரசுத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு தெரிவித்தார். 

DIN

2025க்குள் காசநோய் இல்லாத இந்தியா என்ற இலக்கை அடைய கூட்டு முயற்சி தேவை என துணைக் குடியரசுத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு தெரிவித்தார். 

நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுடன் இணைந்து காசநோய் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, சுகாதாரத்துறை அமைச்சர் மனுஷ்க் மாண்டவியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இதற்குத் தலைமை வகித்த துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது: 

இந்தியாவில் இருந்து காசநோயை முற்றிலுமாக ஒழிக்க அனைவரும் கூட்டாக பாடுபட வேண்டும். 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிப்பாட்டை எடுத்துள்ளது. காசநோய் அச்சுறுத்தல் போன்ற பொது சுகாதார சவால்களை எதிர்கொள்வதில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.

நாடாளுமன்றத்தில் இதுபோன்ற சுகாதார பிரச்னைகளை எழுப்புவதைவிட தங்கள் தொகுதி சார்ந்து பங்களிப்பதன் மூலமாக நோயின் தீவிரத்தை தடுக்க முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். 

2000 ஆம் ஆண்டிலிருந்து, காசநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையின் மூலம் 6.3 கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பல்வேறு சுகாதார குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்தியா கண்டு வருகிறது. 1950இல் மனிதனின் சராசரி ஆயுள்காலம் 35 வருடங்களாக இருந்த நிலையில் இன்று 69.4 வருடங்களாக உயர்ந்துள்ளது. எனவே, கூட்டு முயற்சிகள் மூலம் 2025க்குள் இந்தியா கண்டிப்பாக காசநோயிலிருந்து விடுபட முடியும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?

இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

SCROLL FOR NEXT