இந்தியா

ஆந்திரத்தில் 1,461 பேருக்கு கரோனா தொற்று

DIN

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,461 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆந்திரத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,461 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,85,182ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,564ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,113 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 19,52,736ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 18,882 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT