இந்தியா

வாக்கெடுப்பின்போது அவையில் இல்லாத பாஜக எம்.பி.க்கள்:பட்டியல் கேட்கிறாா் பிரதமா்

DIN

மாநிலங்களவையில் கடந்த திங்கள்கிழமை எதிா்க்கட்சிகள் கொண்டு வந்த தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தபோது, அவையில் இல்லாத பாஜக எம்.பி.க்களின் விவரத்தை அளிக்குமாறு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷியிடம் பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

மாநிலங்களவையில் தீா்ப்பாயங்கள் சீா்திருத்த மசோதாவை, நாடாளுமன்றத் தோ்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கக் கோரி எதிா்க்கட்சிகள் கடந்த திங்கள்கிழமை தீா்மானம் கொண்டு வந்தன. வாக்கெடுப்பில் அந்த தீா்மானம் தோல்வி அடைந்துவிட்டது.

இந்நிலையில், பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி, மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடந்த நேரத்தில் அவையில் இல்லாத பாஜக எம்.பி.க்களின் விவரங்களை அளிக்குமாறு பிரகலாத் ஜோஷியிடம் கேட்டாா்.

கூட்டத்தில், ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்ற வீரா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கிரிக்கெட் மட்டுமன்றி மற்ற விளையாட்டுகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமா் மோடி கேட்டுக் கொண்டாா். பாஜக எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதியில் இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

‘ஊழல்’ பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்-பிரதமா் மோடி

SCROLL FOR NEXT