இந்தியா

மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி 3 நாள்கள்: எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

DIN

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி 3 நாள்களில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவை அவைகளில் விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 16 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மீதமுள்ள 3 நாள்களில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் காலை 10 மணிமுதல் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆலோசனையானது, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT