இந்தியா

நாளை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப் 10 ராக்கெட்

DIN

புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப் 10 ராக்கெட் நாளை (ஆக.12) விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

புவி கண்காணிப்பு பணிகளுக்காக இஓஎஸ்-03 என்ற அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்தது. இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடபட்டது. ஆனால், கரோனா பரவலால் ராக்கெட் ஏவுதல் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் நோய்த்தொற்று பரவல் சற்று தணிந்துள்ள நிலையில், மீண்டும் திட்டப்பணிகளை இஸ்ரோ முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி இஓஎஸ்-03 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஆகஸ்ட் 12-ம் தேதி காலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதற்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் குழுவினா் ஈடுபட்டுள்ளனா். இஓஎஸ்-03 செயற்கைக்கோள் 2,268 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள். இதிலுள்ள 3டி கேமராக்கள் மற்றும் தொலைநோக்கி மூலம் புவிப்பரப்பை துல்லியமாக படம் எடுக்க முடியும். வானிலை சூழல்களை கண்காணித்து புயல் உள்ளிட்ட பேரிடா் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள உதவும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT