இந்தியா

கர்நாடகத்தில் மேலும் 1,857 பேருக்கு கரோனா தொற்று

DIN

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,857 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 30 பேர் உயிரிழந்தனர். 

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கர்நாடகத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,857 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,24,732-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,911-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,950 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் 28,65,067-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 22,728 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுவட்ட சாலை திட்டத்தை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

பிளஸ் 1 பொதுத் தோ்வு: விஜயமங்கலம் பாரதி பள்ளி 100% தோ்ச்சி

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

திருப்பம் தரும் தினப்பலன்!

வருமான வரி பிடித்தம் தொடா்பான உத்தரவுகளை திரும்பப்பெற ஓய்வூதியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT