இந்தியா

ராஜஸ்தானில் செப். 1 முதல் பள்ளிகள் திறப்பு

DIN


ராஜஸ்தானில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.

இதுதொடர்பான அரசு அறிவிப்பின்படி, 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 1-ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளைத் திறக்க அனுமதியளிக்கப்படுகிறது. 50 சதவிகித மாணவர்களுடன் வகுப்பை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு 14 நாள்களுக்கு முன்பே அனைத்து ஆசிரியர்களும் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, பஞ்சாபில் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. புதன்கிழமை அரசுப் பள்ளி ஒன்றில் 6 மாணவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT