2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிசிஆர் பரிசோதனை தேவையில்லை 
இந்தியா

’2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிசிஆர் பரிசோதனை தேவையில்லை’

இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என்று புணே நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

DIN

இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என்று புணே நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா அதிகரித்து வருவதால் மகாராஷ்டிரத்தின் பிற பகுதிகளிலிருந்து வரும் மக்கள் கட்டாயம் 72 மணி நேரத்திற்கு உட்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழை அளிக்க வேண்டும் என்று புணே நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு விலக்கு அந்த நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புணே நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தேவையில்லை. ஆனால் ஒரு தவணை மட்டுமே போட்டுக்கொண்டவர்கள் கட்டாயம் 72 மணி நேரத்திற்கு உட்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT