‘இதுவரை 56 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு 
இந்தியா

‘இதுவரை 56 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு

நாட்டில் இதுவரை 56 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

DIN

நாட்டில் இதுவரை 56 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 56 கோடிக்கும் அதிகமானோருக்கு (56,00,94,581) கரோனா தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி, முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது.

இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 49.48 லட்சத்திற்கும் அதிகமான (49,48,965) தடுப்பூசிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

18-44 வயது பிரிவில் இதுவரை 27,45,272 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 5,33,586 பயனாளிகள் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் இன்று பெற்றனர்.

நாட்டில் இதுவரை மொத்தம் 4,35,253,213 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 12,48,41,368 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 1,13,12,852 பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 9,23,241 நபர்கள் இரண்டாம் தவணை இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கைக்கு சட்டப் பேரவை உறுதி மொழிக்குழு இன்று வருகை

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவா் கைது

பிஏபி வாய்க்காலில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT