கோப்புப்படம் 
இந்தியா

ஆணும் திருமணமான பெண்ணும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்குள் செல்லலாமா? உயர் நீதிமன்றத்தின் கருத்து என்ன?

ஆணுக்கும் திருமணமான பெண்ணுக்குமிடையேயான லிவ் இன் ரிலேஷன்ஷிப் சட்ட விரோதமானது என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

DIN

ஆணுக்கும் திருமணமான பெண்ணுக்குமிடையேயான லிவ் இன் ரிலேஷன்ஷிப் சட்ட விரோதமானது என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆணுக்கும் திருமணமான பெண்ணுக்குமிடையேயான லிவ்விங் ரிலேஷன்ஷிப் சட்ட விரோதமானது என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி, நீதிபதி சதீஷ் குமார் சர்மா அமர்வு இதுகுறித்து உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.

30 வயது பெண்ணும் ஜுன்ஜுனு மாவட்டத்தை சேர்ந்த 27 வயது ஆணும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், தனது கணவர் வீட்டில் கொடுமைப்படுத்தியதாகவும் அதன் காரணமாக வீட்டிலிருந்து வெளியேறிதாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, ஆண் ஒருவருடன் பாதிக்கப்பட்ட பெண் ஒரே வீட்டில் வாழ்ந்துவருகிறார். இந்தநிலையில், பாதுகாப்பு  கேட்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றத்தில் விசாரணையின்போது, மனுதாரர்கள் இருவரும் வயது வந்தவர்கள் என்றும் அவர்களின் சொந்த விருப்பத்தின்பேரிலேயே லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதம் முன்வைத்தார்.

ஆனால், பாதுகாப்பு கேட்ட மனுதாரர்களின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றம், "அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்ததில் பெண் மனுதாரருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது தெரியவந்துள்ளது. விவாகரத்து பெறாத அவர், மற்றோரு மனுதாரருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்துவருகிறார். இச்சூழலில், இவர்களது லிவ் இன் ரிலேஷன்ஷிப் என்பது சட்ட விரோதமானது" என தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துலா ராசிக்கு சுபநிகழ்ச்சி: தினப்பலன்கள்

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது

SCROLL FOR NEXT