ஆப்கனிலிருந்து இந்தியர்கள் மீட்பு: பிரதமர் தலைமையில் இன்று ஆலோசனை
பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் இன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் இன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து, சர்வதேச நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் மக்களைத் திரும்ப அழைத்து வரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு கட்டமாக 250 இந்திய அதிகாரிகள் காபூலிலிருந்து வெளியேற்றப்பட்டு இந்தியா வந்தடைந்தனர்.
தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் பாதுகாப்பு விவகாரங்களிலும் மற்ற நாடுகள் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டின் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் நேற்று இரவு நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.