முகப்பு
இந்தியா

தில்லியில் ஓடும் காரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை

தில்லியில் ஓடும் காரில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

தில்லியில் ஓடும் காரில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நொய்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தில்லி சாஸ்திரி பூங்காவில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தன்னை இரு ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். 

பெண் புகாரின்பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு குற்றம் சாட்டப்பட்ட ரோஹித் மற்றும் நிதின் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

சமூக ஊடகங்கள் மூலமாக அந்த பெண்ணுக்கு இவர்கள் இருவரும் பழக்கமாகியுள்ளனர். பெண்ணிற்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில்,  வேலை தருவதாகக் கூறி தில்லிக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், காரின் எண்ணைக் கண்டறிந்து குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →