கொல்கத்தா உயர்நீதிமன்றம் 
இந்தியா

மேற்கு வங்க வன்முறை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ANI

மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானவுடன், பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். சில இடங்களில் பாஜக அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்ட விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்த வன்முறையில் தங்கள் கட்சியைச் சோ்ந்த பல தொண்டா்கள் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. அதேபோல இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் திரிணமூல் தொண்டா்களால் தாக்கப்பட்டதாக அக்கட்சியினா் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் குறித்து கொல்கத்தா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பல்வேறு தரப்பினரிடையே விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், சிபிஐ மூத்த அதிகாரியின் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT