கோவா : மர்மமான முறையில் 2 ரஷிய பெண்கள் பலி 
இந்தியா

கோவா : மர்மமான முறையில் 2 ரஷிய பெண்கள் பலி

கோவாவில் ரஷியா நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் மர்மமான முறையில் இறந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

DIN

கோவாவில் ரஷியா நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் மர்மமான முறையில் இறந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

வட கோவாவின் சியோலிம் கிராமத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்த ரஷிய நாட்டைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா ஜாவி (24) மற்றும் கேத்ரீனா திகோவா(34) ஆகிய  இரு பெண்கள் அவரவர் அறைகளில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள். 

முதல் கட்ட விசாரணையில் இருவரின் உடலிலும் காயங்கள் இல்லை என்றும் இருப்பினும் இயற்கைக்கு மாறான மரணம் என்றே வழக்கு பதிவு செய்திருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பல வெளிநாட்டு பயணிகளுக்கு பிடித்த சுற்றுலாத் தளமாக இருக்கும் கோவாவில் சமீப காலமாக ரஷியர்களின் வருகையும் அதிகரித்திருக்கிறது.

சியோலிம் கிராமம் கடற்கரைக்கு அருகே இருப்பதால் இங்கு அதிக அளவில் ரஷியர்கள் தங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT