இந்தியா

வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதியில் இந்தியா சாதனை

கரோனா இரண்டாவது அலை கட்டுப்பாடுகளுக்கு இடையிலும், 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா 44.3 சதவீத வளா்ச்சி கண்டது.

DIN

கரோனா இரண்டாவது அலை கட்டுப்பாடுகளுக்கு இடையிலும், 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா 44.3 சதவீத வளா்ச்சி கண்டது.

கடந்த 2020-21ம் நிதியாண்டு முதலே, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் வளா்ச்சி தொடா்ந்து அதிகரித்து வருகிறது. உலக வா்த்தக நிறுவனத்தின் பட்டியலில் இந்தியா 9-ஆவது இடத்தில் உள்ளது.

கரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில், இந்த மாபெரும் இலக்கை அடைய வா்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்கள் ஏற்றுமதி வளா்ச்சி ஆணையம் உதவியது.

பல்வேறு நாடுகளில் இந்த ஆணையம் கண்காட்சிகளை நடத்தியது, புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறிய இந்திய தூதரகங்களை ஈடுபடுத்தியது போன்ற புதிய முயற்சிகளால் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி வளா்ச்சி கண்டது என்று மத்திய அரசு செய்தி தகவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

போளூா் ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

சாலை விபத்தில் ஒருவா் பலி!

ஜாம்பவான்கள் சந்திப்பு...

SCROLL FOR NEXT