இந்தியா

கேரளத்தில் மேலும் 10,402 பேருக்கு கரோனா

DIN

கேரளத்தில் மேலும் 10,402 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,402 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மலப்புறத்தில் 1,577, கோழிக்கோட்டில் 1,376, பாலக்காடு 1,133 பேருக்கும் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,14,305ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 66 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,494ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 25,586 பேர் மீண்டனர். 

இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,31,066ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,63,212 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 63,406 மாதிரிகளும், இதுவரை 3.02 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT