முகப்பு
இந்தியா

வங்கியை கொள்ளையடிக்க முயற்சி: துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலி

அசாமில் கொள்ளையடிக்க முயற்சித்ததாகக் கூறி காவல்துறையினர் மூவரை சுட்டு கொன்றுள்ளனர்.

Updated On : 22 ஆகஸ்ட், 2021 at 4:10 PM
கோப்புப்படம்
பகிர்:

அசாமில் கொள்ளையடிக்க முயற்சித்ததாகக் கூறி காவல்துறையினர் மூவரை சுட்டு கொன்றுள்ளனர்.

அசாம் மாநிலம் கோக்ராஜர் மாவட்டத்தில் உள்ள வங்கியை கொள்ளையடிக்க சிலர் முயன்றுள்ளனர். அந்த முயற்சியை தடுத்து நிறுத்திய அம்மாநில காவல்துறையினர் மூவரை சுட்டு கொன்றுள்ளனர்.

இதுகுறித்து அசாம் காவல்துறை இயக்குநர் பாஸ்கர் ஜோதி மஹந்தா கூறுகையில், "சனிக்கிழமை, போட்கான் கிராமம் அருகே செங்மாரியில் உள்ள வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றதையடுத்து காவலர்கள் மீது கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Advertisement

இதில், காவல்துறையினர் நடத்திய பதில் துப்பாக்குச்சூட்டில் மூன்று கொள்ளையர்கள் கொல்லப்பட்டனர். மற்ற மூவர் தப்பித்துவிட்டனர். வாகனங்கள், ஆயுதங்கள், துப்பாக்கிகள், ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன" என்றார்.

கொள்ளையர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தப்பி சென்ற மற்ற மூன்று கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக காவல்துறையினற் தெரிவித்துள்ளனர். கொள்ளை சம்பவம் குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், "குற்றங்கள் நடைபெறாக மாநிலமாக அசாம் மாற்றப்படும். பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை ஆகியவை நிறுத்தப்பட வேண்டும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.