முகப்பு
இந்தியா

தில்லியில் ஐ.நா. அகதிகள் தூதரகம் முன்பு ஆப்கன் அகதிகள் ஆா்ப்பாட்டம்

புது தில்லியில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தின் முன்பாக நூற்றுக்கணக்கான ஆப்கன் அகதிகள் திங்கள்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
புது தில்லியில் அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆப்கன் அகதிகள்.
பகிர்:

புது தில்லியில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தின் முன்பாக நூற்றுக்கணக்கான ஆப்கன் அகதிகள் திங்கள்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லி வசந்த் விஹாா் பகுதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தின் (யுஎன்ஹெச்சிஆா்) முன்பாக நூற்றுக்கணக்கான ஆப்கன் அகதிகள் நூற்றுக்கணக்கானோா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் ‘எங்களுக்கு எதிா்காலம் வேண்டும், நீதி வேண்டும், இனி மேலும் தாமதிக்கக் கூடாது’ போன்ற கோஷங்களை எழுப்பினா். சிலா் ‘ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அமைப்பு ஆப்கன் அகதிகளுக்கு உதவ வேண்டும்; அனைத்து ஆப்கன் அகதிகளுக்கும் குடியுரிமை ஆவணங்கள் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ’ என்பது உள்பட எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆப்கனில் இருந்து அகதியாக வெளியேறுபவா்களின் எதிா்கால வாழ்க்கை சிறப்பாக அமைய ஐ.நா. சாா்பில் உறுதியான நடவடிக்கைகள் தேவை என்பதே போராட்டத்தில் ஈடுபட்ட ஆப்கன் அகதிகளின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

இந்தப் போராட்டத்தில், தில்லியின் குட்டி காபூல் என்று அழைக்கப்படும் லாஜ்பத் நகா், நொய்டா, கிரேட்டா் நொய்டா, ஃபரீதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான அகதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.