இந்தியா

தலைநகரில் 24 மணி நேர புதிய கரோனா சிகிச்சை மையம்

DIN


தில்லியில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கரோனா சிகிச்சைக்கான புதிய மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் புதன்கிழமை திறந்து வைத்தார். 

கரோனா இரண்டாம் அலை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரவியபோது, நிலவிய ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர்.

மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையும் ஏற்பட்டது. எனினும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அதிகரித்து கட்டுப்பாடுகளை விதித்ததன் விளைவாக தற்போது தில்லியில் கரோனா பரவல் குறைந்துள்ளது.

எனினும் தலைநகரில் மீண்டும் கரோனா அதிகரிக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் தில்லி ராஜீவ்காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் புதிய கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தொடக்கி வைத்தார். 

இதில் கரோனா சிகிச்சைக்காக ஊழியர்கள் 24 மணிநேரமும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT