கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆட்டோர் ஓட்டுநர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்ததன் எதிரொலியாக பல்வேறு மாநிலங்களில் மீண்டும் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையில், சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
உள்ளூர் எம்.எல்.ஏ. உதய் கருடாச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்துக்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.