முகப்பு
இந்தியா

கேரளத்தில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிப்பு

கேரளத்தில் புதிதாக 31,445 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
கேரளத்தில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிப்பு
பகிர்:

கேரளத்தில் புதிதாக 31,445 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 31,445 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 19.03 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 20,271  பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 215 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 36,92,628 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 19,972 ஆக உயர்ந்துள்ளது.

கேரளத்தில் நாளுக்குநாள் கரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →