இந்தியா

பொதுப்பணித் துறைகளில் நேரு உருவாக்கிய சொத்துகளை விற்க சதி: மல்லிகார்ஜுன கார்கே

DIN

பொதுப்பணித் துறைகளில் ஜவஹர்லால் நேரு உருவாக்கிய சொத்துகளை முதலாளிகளிடம் விற்க மத்திய அரசு சதி செய்வதாக காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

தேசிய பணமாக்கும் திட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சம் கோடி மதிப்புள்ள மத்திய அரசின் சொத்துகளைப் பணமாக்கும் திட்டத்தை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்திருந்தார்.

இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே இன்று பேசியது:

பொதுப்பணித் துறைகளில் ஜவஹர்லால் நேரு உருவாக்கிய சொத்துகளை முதலாளிகளிடம் விற்க மத்திய அரசு சதி செய்து வருகிறது. இது நாட்டை பாதிப்புக்குள்ளாக்கும்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர்களுக்கான வேலை வாய்ப்பு பாதிக்கப்படும். அரசின் சொத்துக்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தவே மத்திய அரசை கோருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT