கோப்புப்படம் 
இந்தியா

ஆண் குழந்தைக்கு தாயான நடிகை

திரிணாமூல் எம்பியும் நடிகையுமான நுஸ்ரத் ஜகானுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

DIN

திரிணாமூல் எம்பியும் நடிகையுமான நுஸ்ரத் ஜகானுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திரிணாமூல் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான நுஸ்ரத் ஜகானுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

நுஸ்ரத் புதன்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, இன்று மதியம் 12.20 மணி அளவில் அவருக்கு குழந்தை பிறந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தாயும் சேயும் நலமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் தாயையும் சேயையும் நுஸ்ரத் நண்பரும் நடிகருமான யாஷ் தாஸ்குப்தா கவனித்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது.

நுஸ்ரத்தின் கணவர் நிகில் ஜெயின் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், "எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அக்குழந்தைக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT